நான்கு வயது சிறுமி வன்புணர்வு - செய்தது யார் தெரியுமா?

ஆகஸ்ட் 16, 2018 710

போபால் (16 ஆக 2018): மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமி 14 வயது சிறுவனால் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ஜல்வா எனும் கிராம பகுதியில் 4 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் நடந்துள்ளது. சிறுவன் தொலைக்காட்சி பார்ப்பதாக அடிக்கடி வீட்டுக்கு வருவான் என்றும், அவ்வாறு வந்தபோது இந்த மாபாதக செயலில் ஈடுபட்டதாகவும் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் சிறுவன் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

14 வயது சிறுவனுக்கு இதுமாதிரியான செயலை செய்வதற்கான துணிச்சலும், தேவையும் வரும் அளவுக்கு நம் சமூக அமைப்பு இருக்கிறதோ? என்ற கேள்வி இங்கு அனைவரும் தங்களுக்குள்ளாக கேட்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வரை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கொடுமை தொடர்ந்துகொண்டே இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...