கேரள வெள்ளம்: அதிர்ச்சி தரும் காட்சிகள் - வீடியோ!

ஆகஸ்ட் 17, 2018 1804

திருவனந்தபுரம் (17 ஆக 2018): கேரளா கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக 13 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

கேரளாவில் பெரு வெள்ளம் பெருக்கெடுட்து ஓடுகிறது. பெரும்பாலான மாவட்டங்கள் தண்னீரில் தத்தளிக்கின்றன. இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீடியோ

கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து ரத்து செய்யப் பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் வரும் 26 ஆம் தேதி வரை இயங்காது என தெரிவிக்கப் பட்டுள்ளது. . மொத்தத்தில் கேரளாவின் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளது. 50 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வெள்ளம் இது என கூறப்படுகிறது.

மீட்புப் பணியில் மத்திய ராணுவம் ஈடுபடுத்தப் பட்டுள்ளது. சபரிமலைக்கு யாத்ரீகர்கள் வரவேண்டாம் என அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசின் உதவியை கேரள மாநிலம் நாடியுள்ளது.

இதற்கிடையே பிரதமர் மோடி இன்று கேரளா வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...