கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு 324 பேர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 17, 2018 661

திருவனந்தபுரம் (17 ஆக 2018): கேரள மழை வெள்ளத்திற்கு இதுவரை 327 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், கேரள முதல்மந்திரி தனது ட்விட்டர் பக்கத்தில், மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கேரள மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை ஆயிரத்து 500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை வெள்ளத்தில் இருந்து மக்களையும் கேரளாவையும் மீட்டெடுக்க உதவ donation.cmdrf.kerala.gov.in ன்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் பிணராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...