சுவாமி அக்னிவேஷ் மீது பாஜகவினர் மீண்டும் கொலைவெறி தாக்குதல்!

August 17, 2018

புதுடெல்லி (17 ஆக 2018): சுவாமி அக்னிவேஷ் மீது பாஜகவினர் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த சுவாமி அக்னிவேஷ் இன்று காலை பாஜக அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்த பாஜகவினர் அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

சமூக ஆர்வலரான 79 வயது சுவாமி அக்னிவேஷ் மீது ஜார்கண்டில் பாஜகவினர் கடந்த மாதம் தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!