கேரள வெள்ள சோகத்திலும் ஒரு மகிழ்வான தருணம்!

August 18, 2018

ஆலுவா (18 ஆக 2018): கேரளாவில் பெரு வெள்ள சோகத்திலும் ஒரு கர்ப்பிணிப் பெண் மீட்கப் பட்டு அவருக்கு அழகிய ஆண்குழந்தையும் பிறந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநில பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளின் மீட்புப்படைகள் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தின் ஆலுவா என்ற் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 25 வயது சாஜிதா என்ற கர்ப்பிணிப் பெண் பனிக்குடம் உடைந்த நிலையில் தவித்து வருவதாக தகவல் வந்தது. இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற இந்திய கடற்படையினர் அந்த கர்ப்பிணி பெண்ணை கயிறு மூலம் மீட்டனர். மீட்கப்பட்ட கர்ப்பிணி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நிமிடங்களில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் பிள்ளையும் நல்ல விதமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!