வெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து

ஆகஸ்ட் 18, 2018 510

திருவனந்தபுரம் (18 ஆக 2018): கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக எந்த பகுதியையும் பார்வையிடவில்லை.

கேரள மாநிலத்தில் கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கேரள மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அம்மாநிலத்தில் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மீண்டும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, கேரளா வந்தார். தற்போது அவர் வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அவர் நடத்த இருந்த வான்வழி சர்வே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...