வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கிராமம்!

ஆகஸ்ட் 18, 2018 533

திருவனந்தபுரம் (18 ஆக 2018): வெள்ளம் பாதித்த கர்நாடகாவில் ஒரு கிராமமே அடித்துச் செல்லப் பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் குடகு மாவட்டம், மடிகேரி தாலுக்காவில் காண்டானாகொள்ளி என்ற கிராமமே நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இந்த கிராமம் இருந்ததற்கான ஒரு சிறு தடயம் கூட இல்லாமல் மொத்தமாக சென்றுவிட்டது.

கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் கர்நாடகாவிலும் மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...