சுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்!

ஆகஸ்ட் 18, 2018 778

புதுடெல்லி (18 ஆக 2018): டெல்லியில் சுதந்திர தினத்தன்று தாவூத் ஆரிஃப் என்பவர் மீது மது அருந்திய கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழக முன்னாள் மாணவரான தாவூத் ஆரிஃப் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் அருகே மது அருந்திய சிலர் தாவூத் மீது மத துவேஷத்தை தூண்டும் வகையில் பேசியதோடு, அவர் மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது.

அப்போது அவர்கள் ஆடல் பாடல் என கொண்டாட்டத்தில் இருந்துள்ளனர். மேலும் அதிக சப்தத்துடன் பாடல்கள் இசைக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து அப்பார்ட்மெண்ட் உரிமையாளரிடம் தாவூத் புகார் அளித்துள்ளார். இதன் பிறகு அந்த கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசில் தாவூத் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். மேலும் அவரை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே எஃப் ஐ ஆர் பதிவு செய்யும் நோக்கம் இல்லை. எனினும், அந்த கும்பலிடமிருந்து பாதுகாப்பு தேவை என தாவூத் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இன்னும் அந்த தாக்குதலை நான் மறக்க வில்லை. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளேன். எனினும் இன்னும் அச்சம் நிலவுகிறது." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...