பாகிஸ்தான் சென்ற சித்துவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு!

ஆகஸ்ட் 19, 2018 536

புதுடெல்லி (19 ஆக 208): முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல் வாதியுமான நவ்ஜோத் சிங் சித்து இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்ற நிலையில் அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளாது.

பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் நேற்று இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார்.

இந்த பதவி ஏற்பு விழாவுக்காக இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இம்ரான்கானின் அழைப்பை சித்து ஏற்று, பாகிஸ்தான் சென்றார். மற்ற வீரர்கள் செல்லவில்லை.
Navjot Singh Sidhu under fire for his Pakistan visit
இந்நிலையில் சித்துவின் பாக்கிஸ்தான் பயணத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் பாஜக தலைவர் சுவைத் மாலிக் தெரிவிக்கையில் சித்துவின் பாக் பயணம் மிகவும் வெடகக் கேடானது என்று தெரிவித்துள்ளார்.

நவாஸ் செரீப் பாக் பிரதமராக இருந்தபோது பிரதமர் மோடி திடீரென பாக்கிஸ்தான் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு நல்லெண்ண தூதராக நான் பாகிஸ்தான் செல்ல உள்ளேன். எனது பயணத்தின் மூலம் இரு நாடுகளிடையே உள்ள உறவு மேம்படும் என நான் நம்புகிறேன் என அவர் வாஹா - அட்டாரி எல்லையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...