கேரளாவுக்கு மம்தா பாணர்ஜி 10 கோடி நிதியுதவி!

August 19, 2018

கொல்கத்தா (19 ஆக 2018): கேரளாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி ரூ 10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி, டெல்லி அரசின் சார்பில் ரூ.10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் ரூ.25 கோடி, பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி, அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசின் சார்பாக சார்பில் ரூ.20 கோடி, குஜராத் அரசின் சார்பாக ரூ.10 கோடி, உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பாக ரூ.15 கோடி, பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.10 கோடி, ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி, மத்தியப்பிரதேசம் அரசின் சார்பில் ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசு சார்பில் 20 கோடி ரூபாய் என நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!