முடிவுக்கு வந்த கனமழை - மீட்புப் பணிகள் தீவிரம்!

ஆகஸ்ட் 19, 2018 386

திருவனந்தபுரம் (19 ஆக 2018): கேரளாவில் பெய்து வந்த கனமழை முடிவுக்கு வந்தது. தற்போது மீட்ப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 8 முதல் பெய்து வரும் பேய்மழையால் கேரளத்தில் இதுவரை 350 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். ஆறு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் 3000 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடும் மழைக்கு இடையே மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்களும் படகுகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கேரளாவில் பெய்து வந்த மிக கனமழை முடிவுக்கு வந்துள்ளதாக ஏஎன்ஐ செய்து நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கிய கிராமங்களையும் வயல்வெளிகளையும் ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் சார்பில் உடனடி நிதியாக 500 கோடி அறிவித்துள்ளார். மேலும் கூடுதலாக ஹெலிகாப்டர்கள், படகுகள், இதர உபகரணங்களை வழங்கவும் அவர் உறுதியளித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...