கேரள மக்களுக்கு உதவுவதாக வாட்ஸ் அப்பில் பரவிய பொய்யான வங்கி கணக்கு!

ஆகஸ்ட் 20, 2018 603

திருவனந்தபுரம் (20 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரள மக்களுக்கு உதவுவதாக வாட்ஸ் அப்பில் பரவிய பொய்யான வங்கிக் கணக்கை எஸ்பிஐ பிளாக் செய்துள்ளது.

கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கனமழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அணைகள் அனைத்தும் நிரம்பி அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காணப்படுகிறது. முப்படைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் சென்ற வண்ணம் உள்ளன. பலரும் உதவி புரிந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் பொய்யான தகவல் ஒன்றை வாட்ஸ் அப்பில் பரவ விட்டுள்ளார். அதில் கேரள மக்களுக்கு உதவ வேண்டியும், அதில் முதல்வர் நிவாரண நிதி வங்கிக் கணக்கு என்ற பொய்யான வங்கிக் கணக்கு ஒன்றையும் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் இது பொய்யான வங்கிக் கணக்கு என தெரிய வந்தது. மேலும் அந்த வங்கிக் கணக்கை தொடங்கியவர் திருச்சியை சேர்ந்த விஜய்குமார் என்றும் தெரிய வந்துள்ளது உடனே அந்த கணக்கை எஸ்பிஐ பிளாக் செய்துள்ளது. மேலும் விஜய் குமார் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...