கேரளாவை அதி தீவிர வெள்ள பேரிடர் - ஒன்றிய அரசு அறிவிப்பு!

ஆகஸ்ட் 20, 2018 575

புதுடெல்லி (20 ஆக 2018): கேரளாவை அதி தீவிர வெள்ளம் பாதித்த மாநிலமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது

கேரளாவில் இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு கேரளாவில் பெரிய மழை பெய்துள்ளது. 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கே இப்போதுதான் வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் இந்த வெள்ளம் குறித்து ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அதிதீவிர பேரிடர் என்று அறிவித்துள்ளது. ஆனால் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது ஆனால், கேரளாவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...