கேரள வெள்ளத்தில் நெகிழ வைத்த மீனவர் - வைரல் வீடியோ!

ஆகஸ்ட் 20, 2018 947

மலப்புரம் (20 ஆக 2018): கேரள வெள்ளத்தில் படகில் ஏற முடியாமல் தவித்த மக்களை தன் உடலை படியாக பயன்படுத்தி படகில் ஏற உதவிய மீனவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

32 வயதான கே.பி. ஜெய்ஸ்வால் என்னும் அவர் கேரள வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மலப்புரத்தில் உள்ள கிராமத்தில் இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த பல பெண்கள் மிதவைப் படகில் ஏற முடியாமல் தவித்தபோது தயங்காமல் கீழே குனிந்து தன் முதுகையே படிக்கட்டாக்கி உதவினார்.

வீடியோ

வெங்கரா கிராமத்தில் இம்மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீனவர்களின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக ஜெய்ஸ்வாலின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...