கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி நிதியுதவி!

ஆகஸ்ட் 21, 2018 625

துபாய் (21 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

வரலாறு காணாத வெள்ளத்தால் உருகுலைந்து கிடக்கும் கேரளாவை மீண்டும் கட்டமைக்க ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அந்நாட்டின் 30% மக்கள் தொகை இந்தியர்களுடையது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. “ ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியில் கேரள மக்கள் எப்போதும் பங்காற்றியுள்ளனர். பங்காற்றியும் வருகின்றனர்” என்று கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை என்றும் அந்நாட்டு துணை அதிபர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இது வரை இந்திய அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி 680 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...