பக்ரீத் பண்டிகைய ஒட்டி மாடுகளை நிராகரிக்கும் முஸ்லிம்கள்!

ஆகஸ்ட் 22, 2018 691

லக்னோ (22 ஆக 2018): பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் நாடெங்கும் கொண்டாடப் பட்டு வரும் நிலையில் மாட்டுக்கு பதிலாக ஆடுகளை பலியிடுவதில் முனைப்பு காட்டுகின்றனர்.

சமீப காலமாக பசு பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில் வட மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களும், தலித்துகளும் குறி வைத்து தாக்கப் பட்டும் கொலை செய்யப் பட்டும் வருகின்றனர்.

இதனால் வட மாநில முஸ்லிம்களிடையே அச்சம் தலை தூக்கியுள்ளது. மேலும் பக்ரீத் பண்டிகையில் முன்பு அதிகமாக மாடுகளை பலியிட்டு வந்த முஸ்லிம்கள் தற்போது ஆட்டை பலியிட்டு வருகின்றனர்.

முஸ்லிம் மதகுருமார்களும் ஆட்டை பலியிட்டு தங்கள் கடமையை நிறைவேற்றுங்கள் என்றே வலியுறுத்தி வருகின்றனர். நெருக்கடியாக சூழ்நிலையில் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து வரும் நிலையில் பண்டிகை காலங்களில் தங்களது மகிழ்ச்சிக்கு இடையூறு செய்யும் விசயங்களை தவிற்ப்பதே சிறப்பானது என்றும் முஸ்லிம் மத குருமார்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...