மும்பை அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் பலி!

August 22, 2018

மும்பை (22 ஆக 2018): மும்பை அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

தெற்கு மும்பையில் இன்று காலை அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 2 பேர் இறந்துள்ளதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் பரவி வந்த தீ தற்போது கட்டுக்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கிரிஸ்டல் டவர் என்ற அந்த அடுக்குமாடி கட்டடத்திலிருந்து பல மணி நேரம் தொடர்ந்து புகை வந்துள்ளது. மும்பையின் பரேலுக்கு அருகில் இருக்கும் ஹிந்த்மாதா திரையரங்கம் பக்கத்தில் கிரிஸ்டல் டவர் கட்டடம் இருக்கிறது. இது லெவல்-2 தீ விபத்து என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!