கோவில் வளாகத்தில் நடந்த பக்ரீத் பெருநாள் தொழுகை!

ஆகஸ்ட் 23, 2018 757

திருச்சூர் (23 ஆக 2018): கேரளாவில் மசூதி ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பக்ரீத் பண்டிகை தொழுகை நடத்த கோவில் வளாகத்தை கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி மத நல்லிணக்கத்திற்கு மற்றுமொரு உதாரணமாக விளங்கியுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சூர் மாவட்டம் கொழுக்கடாவு பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளம் சூழ்ந்து சேதம் அடைந்துள்ளதால் பக்ரீத் பெருநாள் தொழுகை நடத்த வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் முஸ்லிம்கள் பெருநாள் தொழுகை நடத்த புரப்பள்ளிக்காவு ரத்னேஸ்வரி கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனை அடுத்து அங்கு அப்பகுதி முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். இச்சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு மற்றும் ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

ஏற்கனவே வெள்ளத்தால் சேதம் அடைந்த கோவில்களை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...