இந்துக்களுக்கு அரணாக அமைந்த மசூதி - முஸ்லிம்களுக்கு அரணாக அமைந்த கோவில்!

ஆகஸ்ட் 23, 2018 714

திருவனந்தபுரம் (23 ஆக 2018): கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மசூதி, வெள்ளத்தின் போது பல இந்து குடும்பங்களுக்கு தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரள மாநிலம் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள பல வாரங்கள் ஆகலாம் என்கிற நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் மசூதியில் பலர் தஞ்சமடைந்தனர். இதில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதும், அவர்களுக்கு முஸ்லீம்கள் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து தந்துள்ளனர் என்பதும் பலரை நெகிழ வைத்துள்ளது.

சாலியர் கிராமத்தில் உள்ள அகம்படத்தில் இருக்கிறது ஜுமா மசூதி. கடந்த 8 ஆம் தேதி முதல் பெய்து வந்த பெரு மழையை அடுத்து, இந்த மசூதி நிவாரண முகாமகவே மாறியது. ஏறத்தாழ 17 இந்து குடும்பங்கள், அவர்களின் வீட்டில் வெள்ள நீர் சூழ்நததை அடுத்து, மசூதிக்கு வந்து தங்கினர். அவர்களுக்கு உண்ண, உறங்க மற்றும் பிற அடிப்படை தேவைகளை அங்கிருந்த முஸ்லீம்கள் செய்து தந்துள்ளனர்.

இது குறித்து சாலியர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் உஸ்மான் கூறுகையில், ‘மசூதியில் தங்கியிருந்த 78 பேரில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். நாங்கள் 8 ஆம் தேதியே மசூதியில் மக்கள் வந்து தங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தாலும், 14 ஆம் தேதி தான் அதிக அளவிலானவர்கள் வந்தனர். அப்போது தான் நிலச்சரிவு சம்பவங்கள் அதிகமாக நடக்க ஆரம்பித்தன. சிலர் வெள்ள நீர் வடியத் தொடங்கியதை அடுத்து, அவர்களின் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் பலர் பக்ரீத் பண்டிகையை எங்களுடன் கொண்டாடி விட்டுச் சென்றனர்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் இருக்கும் வென்னியோடு விஷ்ணு கோயிலையும், மலப்புரம் மன்னார்காட்டில் உள்ள ஐயப்பன் கோயிலையும் இரண்டு முஸ்லீம் குழுக்கள் சுத்தம் செய்துள்ளனர். முஸ்லீம்கள் கோயிலை சுத்தம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மசூதி, வெள்ளத்தின் போது பல இந்து குடும்பங்களுக்கு தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் மசூதியில் பலர் தஞ்சமடைந்தனர். இதில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதும், அவர்களுக்கு முஸ்லீம்கள் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து தந்துள்ளனர் என்பதும் பலரை நெகிழ வைத்துள்ளது.

வயநாட்டில் இருக்கும் வென்னியோடு விஷ்ணு கோயிலையும், மலப்புரம் மன்னார்காட்டில் உள்ள ஐயப்பன் கோயிலையும் இரண்டு முஸ்லீம் குழுக்கள் சுத்தம் செய்துள்ளனர். முஸ்லீம்கள் கோயிலை சுத்தம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது இப்படியிருக்க திருச்சூர் மாவட்டம் கொழுக்கடாவு பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளம் சூழ்ந்து சேதம் அடைந்துள்ளதால் பக்ரீத் பெருநாள் தொழுகை நடத்த வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் முஸ்லிம்கள் பெருநாள் தொழுகை நடத்த புரப்பள்ளிக்காவு ரத்னேஸ்வரி கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனை அடுத்து அங்கு அப்பகுதி முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். இச்சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு மற்றும் ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

இப்படி ஒருவருக்கொருவர் நெருக்கடியான நேரங்களில் நட்பு பாராட்டிக் கொள்ளும் சம்பவங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...