கேரளாவுக்கு எல்லாவகையான உதவியும் செய்யத் தயார் - இம்ரான்கான்!

ஆகஸ்ட் 24, 2018 572

இஸ்லாமாபாத் (24 ஆக 2018): வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளாவிற்கு எல்லா வகையான உதவியும் செய்யத் தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் 370-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பாக பிராத்தனை தெரிவிக்கொள்கிறேன். மேலும் எந்த வகையான உதவியையும் பாகிஸ்தான் செய்ய தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...