விசாரணை முடியும் முன்பே ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் டிஸ்மிஸ்!

ஆகஸ்ட் 24, 2018 646

புதுடெல்லி (24 ஆக 2018): ஐஏஎஸ் தேர்வில் காப்பி அடித்ததாக குற்றம் சாட்டப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஐபிஎஸ் அதிகாரி, சபீர் கரீம் நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், ஐஏஎஸ் பதவிகளுக்காக நடந்த தேர்வில் கலந்துகொண்ட சபீர் புளூ டூத் வைத்து காப்பி அடித்த போது கையும் களவுமாக பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், சபீர்கரீமை ஐபிஎஸ் பதவியிலிருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...