நாட்டை பிளவுபடுத்துவதே பாஜகவின் நோக்கம் - ராகுல் காந்தி தாக்கு!

ஆகஸ்ட் 25, 2018 480

லண்டன் (25 ஆக 2018): வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே காங்கிரஸின் நோக்கம் ஆனால் அதனை முற்றிலும் மாற்றி அமைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் கை கோர்த்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

லண்டனில் சர்வதேச மூலோபாய ஆய்வு கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்.எஸ்) பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-

"காங்கிரஸ் அனைவருக்கும் சொந்தமானது, எங்கள் வேலை வேறுபாடுகளில் ஒற்றுமை என்ற சிந்தனை பரப்ப வேண்டும் என்பதே, அனால் இன்று இந்தியாவை ஆட்சி செய்யும் அரசாங்கம் வேறு விதமாக வேலை செய்கிறது. பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சேர்ந்து சொந்த மக்களைப் பிரிக்க நினைக்கிறார்கள். அவர்கள் நம் நாட்டில் வெறுப்பை பரப்புகிறார்கள்.

எங்கள் வேலை மக்களை ஒன்றிணைப்பதோடு நாட்டை முன்னெடுத்துச் செல்வதும், அதை எவ்வாறு செய்வது என நாங்கள் காட்டியுள்ளோம் என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...