பயங்கரவாத வழக்கில் மேலும் ஒரு இந்துத்வா தொடர்பாளர் கைது

August 25, 2018

கத்கோபார் (25 ஆக 2018): மகாராஷ்டிராவில் பயங்கரவாத வழக்கில் மேலும் ஒரு இந்துத்வா தொடர்பாளரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி மகாராஷ்டிராவில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன. இது தொடர்பாக இந்துத்வா பயங்கரவாதத்துடன் தொடர்புடைய வைபவ் ரஔட் , ஷரத் கலஸ்கார், சுதனாவ கோன்தலேகர், மற்றும் முன்னாள் சிவசேனா நிர்வாகி, ஶ்ரீகாந்த் பன்கர்கார் ஆகியோரை புனேவில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

இந்நிலையில் அவினேஷ் பவார் என்ற 30 வயது இளைஞரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Search!