கேரள வெள்ளத்திற்கு இதுதான் காரணமாம்? - புழுதியை கிளப்பும் பாஜக!

August 26, 2018

பெங்களூரு (26 ஆக 2018): கேரள வெள்ளத்திற்கு மாட்டிறைச்சி சாப்பிடுவதுதான் காரணம் என்ற அறிவார்ந்த பேச்சை பேசியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ ஒருவர்.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை சரியாகிவரும் சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.எல்.ஏவுமான பசன்கவுடா பட்டில்யட்னால், இந்து மதத்தின் உணவர்வுகளை பாதிக்கும்படி நடந்துகொண்டால் மதமும் தண்டிக்கும், இயற்கையும் தண்டிக்கும் என குறிப்பிட்ட அவர் உதாரணமாக கேரளா எடுத்துக்கொள்ளுங்கள் அங்கு இருப்பவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நேரடியாக ஆதரித்தனர். போன வருடம் இதே நேரம் அங்கு மாட்டிறைச்சி திருவிழா நடைபெற்றது ஆனால் தற்போது அதேநாளில் இன்று கேரளாவின் நிலையை பாருங்கள் என சர்சைக்குரியவகையில் பேசியுள்ளார்.

இது இப்படியிருக்கு குஜராத் பூகம்பம், உத்தரகாண்ட் வெள்ளச் சேதம் ஆகியவை எதனால் ஏற்பட்டது என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!