ஆல்ககாலால் ஏற்படும் மரணங்களில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்

ஆகஸ்ட் 27, 2018 715

புதுடெல்லி (27 ஆக 2018): உலக அளவில் ஆல்காஹால் பயன்படுத்துவதால் ஏற்படும் மரணங்களில் இந்தீயாவுக்கு இரண்டாவது இடம் முதலிடத்தில் சீனா உள்ளது.

பிரிட்டனை சேர்ந்த தி லான்சன்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகளவில் ஏற்படும் மரணங்களில், பத்தில் ஒன்று ஆல்கஹால் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

ஆண்கள், பெண்கள் என இருபாலரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. 195 நாடுகளில், 1995 - 2016 வரை இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர். ஆல்கஹால் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, உடலுக்கு நல்லது என இந்த ஆய்வு அறிவுறுத்தியுள்ளது.

உலகளவில் 2016 கணக்கின் படி, ஆலகஹால் பயன்பாடு காரணமாக 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் 'டாப் - 10' மரணங்களில், ஆல்கஹால் மரணம், 7வது இடத்தில் உள்ளது. ஆல்கஹால் காரணமாக மாரடைப்பு, டி.பி., கேன்சர், விபத்து, சுயதாக்குதல் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து மரணம் ஏற்படுகிறது. உலகில் ஏற்படும் ஆல்கஹால் மரணங்களில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ரஷ்யா மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும், அமெரிக்கா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...