பாஜகவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்!

ஆகஸ்ட் 27, 2018 667

புதுடெல்லி (27 ஆக 2018): வரும் நாடளுமன்றத் தேர்தலில் மதவாத பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தெரிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் 1998-ம் ஆண்டு, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இவர் எழுதிய அவர் எழுதிய `தி ஆர்கியுமென்டேடிவ் இண்டியன்’ என்ற புத்தகம் உலகப் புகழ்பெற்றது. இவர் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பல்கலைகழகங்களில் பொருளாதார மாணவர்களுக்கு பாடம் நடத்தியவர்.

கொல்கத்தாவில் நடந்த “எந்த வழியை நோக்கி இந்தியா செல்கிறது” என்ற நிகழ்ச்சியில் பேசிய அமர்த்தியா சென், “சர்வாதிகார போக்குக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நம் நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் மதவாதத்தை எதிர்த்து, பின் வாங்காமல் போராட வேண்டும்” என்று கூறினார்.

மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்த சென் “2014 தேர்தலில் வெறும் 31 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று , ஆனால் 55 சதவீத சீட்களை வென்று, மிக மோசமான நோக்கத்தை உடைய ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது” என்று பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...