உயிர் போகும் நேரத்திலும் உயர் ஜாதி சிந்தனை - அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்!

August 27, 2018

கொல்லம் (27 ஆக 2018): கேரளாவில் வெள்ளத்தில் தத்தளித்த பிராமணர் குடும்பத்தினரை மீட்க சென்ற மீனவரின் படகில் பிராமண குடும்பத்தினர் ஏற மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஏற்பட வரலாறு காணாத வெள்ளத்தில் சுமார் 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். சுமார் 35 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. தற்போதும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெள்ளம் பாதித்த நேரத்தில் தண்ணீரில் மூழ்கிய கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு பிராமணர் குடும்பத்தினரை ஜார்ஜ் என்ற கிறிஸ்தவ மீனவர் மீட்க படகுடன் சென்றுள்ளார். ஆனால் அந்த பிராமணர் குடும்பத்தினர் ஜார்ஜ் ஒரு கிறிஸ்தவர் என்பதால் படகில் ஏற மறுத்துவிட்டனர்.

எனினும் பல மணி நேரங்கள் கழித்து மேலும் வெள்ளம் சூழ்ந்ததால் ஜார்ஜ் பலமுறை கேட்டுக் கொண்டதற்கிணங்க படகில் ஏற சம்மதித்த அந்த பிராமணர் குடும்பத்தினர் ஜார்ஜ் அவர்களை தொட்டுவிடக் கூடாது என்றுன் எச்சரித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!