ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு!

ஆகஸ்ட் 27, 2018 609

ராஞ்சி (27 ஆக 2018): ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது மாநில அரசு விதித்த தடையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்கண்டில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது கடந்த பிப்ரவரி மாதம் தடை விதித்தது. 1908ல் கிரிமினல் சட்ட திருத்தம் 16-வது பிரிவின் படி ஜார்கண்டில் ஆளும் பா.ஜ.க அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்து உத்தவிட்டது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் அந்த தடையை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் மீது பதிவுச் செய்த முதல் தகவல் அறிக்கையையும்(எஃப்.ஐ.ஆர்) உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

மேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி ஒரு இயக்கத்தை தடைச் செய்வதற்கான நடைமுறைகள் எதனையும் மாநில அரசு கடைப்பிடிக்கவில்லை என்றும் இவ்விவகாரத்தில் இயல்பான நீதியின் தத்துவங்களும், அரசி சாசனத்தின் 19-வது பிரிவும் மீறப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும் தடையை நியாயப்படுத்தும் எந்தவொரு ஆவணத்தையும் ஆஜர்படுத்த மாநில அரசால் இயலவில்லை என்றும் உயர்நீதிமன்றம் கூறியது. தடை உத்தரவு என்பது அநீதியானது.அதனால் தடை உத்தரவை ரத்துச் செய்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...