ஜாமீன் வேண்டுமெனில் இதை செய்யுங்கள் - நீதிபதி பிறப்பித்த விசித்திர உத்தரவு!

ஆகஸ்ட் 28, 2018 537

ராஞ்சி (28 ஆக 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டவர்களுக்கு நீதிபதி விசித்திர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மோசடி செய்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பேர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.பி சிங், மூவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தலா ரூ 7000 நிவாரண நிதியாக வழக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மூவரும் நிதி வழங்கியதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்பித்த பின்பு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் இந்த தீர்ப்பு பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...