இந்தியாவில் நிலநடுக்கம்!

ஆகஸ்ட் 28, 2018 636

கொல்கத்தா (28 ஆக 2018): இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு உட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹூக்லி பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு அடையில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.0 அலகாக பதிவாகியுள்ளது.

தலைநகர் கொல்கத்தா, கோபிபல்லவ்பூர், காரக்பூர் மற்றும் புருலியா-ஜர்கிராம் எல்லைப்பகுதியில் இன்றைய நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டது. ஒடிசா மாநிலத்தின் பலசோர், மயூர்பஞ்ச் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிகிறது. இரு மாநிலங்களிலுல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...