இந்துத்வ பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!

ஆகஸ்ட் 29, 2018 691

மும்பை (29 ஆக 2018): மகாராஷ்டிராவில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த இந்துத்வ பயங்கரவாதிகளிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள நல சோபாரா என்ற பகுதியில் இருந்து இம்மாத தொடக்கத்தில் சனாதன் சஸ்தா அமைப்பை சேர்ந்த வைபவ் ராவத், ஷரத் கலாஸ்கர், சுதான்வ கோந்தலேகர், ஷ்ரீகாந்த் பன்கர்கார், அவினாஷ் பவார் ஆகிய 5 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதில், வைபவ் ராவத் வீட்டில் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவர்களின் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், புனேவில் கடந்த ஆண்டு நடந்த இசைநிகழ்ச்சியில் சுதான்வ கோந்தலேகர், வைபவ் ராவத் ஆகிய இருவரும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்துத்துவத்தை எதிர்க்கும் தனி நபர் பிரபலங்களை கொல்லவும் அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...