என்.டி.ராமராவ் மகன் விபத்தில் மரணம்!

August 29, 2018

அமராவதி (29 ஆக 2018): மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகன் நதமுரி ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம் அடைந்தார்.

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா. நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது, ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், படுகாயம் அடைந்துள்ள ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஹரிகிருஷ்ணா பணியாற்றியுள்ளாது குறிப்பிடத்தக்கது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!