இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

ஆகஸ்ட் 30, 2018 1299

புதுடெல்லி (30 ஆக 2018): இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, 43 காசுகள் சரிந்து, 70.52 ரூபாயாக வர்த்தகமானது. இந்த சரிவு வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...