ரஃபேல் ஒப்பந்தம் குறித்து 24 மணி நேரத்தில் பதில் தேவை - ராகுல் காந்தி!

ஆகஸ்ட் 30, 2018 579

புதுடெல்லி (30 ஆக 2018): ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக 24 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், விமானத்துக்கு அதிக பணம் கொடுத்து வாங்கப்படுவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

ராகுல் இவ்விவகாரத்தை குழந்தை போல் விமர்சிக்கிறார் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ரஃபேல் கொல்லைக்கு தேசத்தின் கவனத்தை மீண்டும் திருப்பியதற்கு மிகவும் நன்றி ஜெட்லி. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து இருக்கும் சந்தேகங்களை போக்கிக் கொள்ள நாடாளுமன்ற குழு ஒன்றை அமைத்து விசாரிக்கலாமா? உங்களது உச்சபட்ச தலைவர் அவரது நண்பரை இந்த ஒப்பந்தம் மூலம் காக்க முயல்கிறார். இது குறித்து நன்கு ஆலோசித்து 24 மணி நேரத்தில் பதில் கூறுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...