டெல்லி விமான நிலையத்தில் பவர் பேங்க் வெடித்ததால் பரபரப்பு!

ஆகஸ்ட் 30, 2018 504

புதுடெல்லி (30 ஆக 2018): டெல்லி விமான நிலையத்தில் பவர் பேங்கை வீசி எறிந்ததை அடுத்து அது வெடித்துச் சிதறியது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

விமானத்தில் பவர் பேங்க் எடுத்து செல்ல கூடாது என்று சட்டம் உள்ளது. பொதுவாக பவர் பேங்க் வெடிக்கும் என்பதால் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மாளவிகா திவாரி என்ற பெண் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார். அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது பையில் பவர் பேங்க் இருந்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண் கண்டிப்பாக பவர் பேங்கை எடுத்து செல்ல வேண்டும் என்றுள்ளார்.

இதனால் அவருக்கும் விமான நிலைய அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால், கோபமடைந்த அந்த பெண்,பவர் பேங்கை எடுத்து அதிகாரிகள் மீது வீசியுள்ளார். தவறி அந்த பவர் பேங்க் சுவரில் விழுந்துள்ளது. இதனால் பவர் பேங்க் உடனே வெடித்துள்ளது. பெரிய சத்தத்தில் வெடித்த, அந்த பவர் பெரிய அளவில் புகையை ஏற்படுத்தியது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில் அந்த பெண் மீது . வெடிபொருட்களுடன் விளையாடுதல், மற்ற உயிர்களுக்கு தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட சட்டங்களில் அந்த பெண் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...