வாட்ஸ் அப் வதந்தியை தடுக்க உதவும் ஆல் இந்தியா ரேடியோ!

ஆகஸ்ட் 30, 2018 410

புதுடெல்லி (30 ஆக 2018) வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் அப் நிறுவனம் ஆல் இந்தியா ரேடியோவை நாடியுள்ளது.

வாட்ஸ் அப்பில் பல்வேறு தகவல்கள் பறிமாறப் படுகின்றன. அவைகளில் பெரும்பாலான செய்திகள் பொய்யானதாக உள்ளன. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் வதந்திகளை முறியடித்து உண்மை நிலையை விளக்க, ஆல் இந்தியா ரேடியோவின் 46 நிலையங்களைப் பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக பீஹார் , ஜார்கண்ட் உள்ளிட்ட 46 ஹிந்தி மொழி பேசும் ரேடியோ நிலையங்களிலும் பின்னர் அனைத்து பிராந்திய மொழிகளிலும் உண்மையான தகவல்கள் அறிவிக்கப்பட்டு மக்கள் பொய்ச் செய்திகளை பரப்ப வேண்டாம் என வானொலி மூலம் அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் , வாட்ஸ் ஆப் தற்போது digital empowerment foundation உடன் இணைந்து நாட்டில் உள்ள பல்வேறு தரப்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...