மாட்டுக்கறி திருடியதாக சந்தேகத்தில் விடுமுறையில் இந்தியா வந்தவர் படுகொலை!

ஆகஸ்ட் 30, 2018 640

லக்னோ (30 ஆக 2018): உத்திர பிரதேசத்தில் எருமை மாட்டுக் கறி திருடியதாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ஷாரூக் என்ற 20 வயது இளைஞர் விடுமுறையில் துபாயிலிருந்து இந்தியா வந்துள்ளார். இவர் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது நண்பர்களுடன் இருந்தபோது எருமை மாட்டுகறி திருடியதாக சந்தேகத்தின் பேரில் மர்ம நபர்கள் அவர்களை தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த ஷாருக் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...