ஸ்டாலின் நேரில் ஆஜராக கோர்ட் சம்மன்!

ஆகஸ்ட் 30, 2018 550

திருச்சி (30 ஆக 2018): அவதூறு வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கலைஞர் அறிவாலையத்தில் கடந்த ஜூன் 21-ம் தேதி, தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் உரையாற்றிய ஸ்டாலின், கலைஞர் ஆட்சியை ஜெ. எப்போதும் மைனாரட்டி ஆட்சி என்று கூறி விமர்சனம் செய்வார். அதற்குத் தலைவர் கலைஞர் ஆமாம் இது மைனாராட்டிகளுக்கா நடத்தப்படும் ஆட்சி என்று சொல்லுவார்.

தற்போது மத்திய அரசு மதசார்பின்னையை கேள்விக்குரியாக நீட் தேர்வில் நடக்கும் பிரச்சனையில் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு எதிர்காலத்தை கேள்விக்குரியாக்குகிறார்கள் ஐ.ஏ.எஸ். முதல் நீதிபதிகள் வரை ஏன் இந்த ஆட்சியை மாற்றாமல் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். .

ஒவ்வொரு அ.தி.மு.க அமைச்சர்களும், எ.ம்.எல்.ஏ-க்களுக்கு மாதந்தோறும் கமிஷன் வகையில் 10 கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. நிறைய கல்விநிறுவனங்கள் வாங்கிக்கொண்டுயிருக்கிறார்கள் என்று செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சி வரும் போது எடப்பாடி முதல் அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என்று பேசியிருந்தார்.

இந்த பேச்சு தொடர்பாக வழக்கறிஞர் சம்பத் என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில், தி.மு.க தலைவர் ஸ்டாலினை இன்று நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் கொடுத்திருந்தார். இன்று புகழஞ்சலி இருப்பதால் வரமுடியவில்லை என தி.மு.க. வழக்கிறஞர் பதில் மனு தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குமரகுரு, வரும் செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து அன்று நேரில் ஆஜர் ஆக உத்தரவிட்டார்.


தி.மு.க அதிகாரபூர்வ தலைவரான சில நாட்களிலே அவதூறு வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருப்பது எப்போது தி.மு.க.விற்கு திருச்சி என்றாலே திருப்பு முனை தான் தற்போது தலைவர் ஆனவுடன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதும் திருச்சி என்பதால் தொண்டர்களும் வழக்கறிஞர்களும் பரபரப்படைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...