இந்து நீதிமன்றங்களை அதிகரிக்க அகில பாரத இந்து மகாசபா முடிவு!

ஆகஸ்ட் 30, 2018 512

லக்னோ (30 ஆக 2018): இந்துக்களின் குடும்பப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்து நீதிமன்றங்கள் அதிகரிக்கப் படும் என்று அகில பாரத இந்து மகாசபா என்ற புதிய அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட்.15-ம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், அகில பாரத இந்து மகாசபா எனும் அமைப்பின் நிர்வாகிகளெனக் கூறிக்கொண்டவர்கள், இந்து நீதிமன்றத்தைத் தொடங்கியதாக அறிவிப்பு செய்தனர்.

முனைவர் பட்டம் பெற்ற பூஜா சகுன் பாண்டே என்பவர் அந்த நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அகில இந்திய இந்து மகாசபாவின் துணைத்தலைவர் அசோக் சர்மா கூறியுள்ளார்.

``இந்த நீதிமன்றமானது இந்து மதத்தினருக்கிடையிலான குடும்பப் பிரச்னை மற்றும் பிற உரிமையியல் பிணக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும்” என்று விளக்கமளித்துள்ள அவர், ``அலிகார், ஹத்ராஸ், மதுரா, ஃபிரோசாபாத், ஷிகோபாத் ஆகிய இடங்களில் மேலும் ஐந்து இந்து நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இவை அனைத்தையும் சேர்த்து முதல் கட்டமாக 15 இந்து நீதிமன்றங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் ” என்றும் கூறியுள்ளார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமானது, நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் சட்டப்படி நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தது. அதற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. இந்நிலையில் இந்து நீதிமன்றங்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...