இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு கடும் சரிவு!

ஆகஸ்ட் 31, 2018 484

புதுடெல்லி (31 ஆக 2018): இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை நேர வர்த்கத்தில் இதவரை இல்லாத அளவு மிகமோசமான சரிவை இந்திய ரூபாய் சந்தித்தது. இந்திய ரூபாய் மதிப்பு நேற்றைய வர்த்தகதில் 70.84 ரூபாயாக சரிந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் 70.95 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. தினசரி வர்த்தகத்தில் 71 ரூபாயாக சரிவடைந்தது. இந்த ஒரு மாதங்களில் நடந்த சரிவு என்பது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத ஒன்றாகும்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 71 ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...