கேரள வெள்ள பாதிப்பிற்கு ரூ 2 கோடி உதவி செய்து அசத்திய பள்ளி மாணவி!

செப்டம்பர் 01, 2018 802

திருவனந்தபுரம் (01 செப் 2018): கேரள வெள்ள பாதிப்பிற்கு பள்ளி மாணவி ரு 2 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கி அசத்தியுள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நூறு கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் ஸ்வகா (வயது 16). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கேரளாவில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டதால், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவல் மாணவி ஸ்வகாவுக்கு தெரிய வந்தது. தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தனது தந்தை தனக்கு எழுதி வைத்த 1 ஏக்கர் நிலத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்தார். இது குறித்து முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதினார்.

கடிதத்தைப் படித்த முதல்வர் நெகிழ்ச்சியடைந்து பாராட்டியுள்ளார். நிவாரணத்தை கண்ணூர் கலெக்டரிடம் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார். இதனையடுத்து மாணவி கண்ணூர் கலெக்டர் முகமது அலியிடம் தனது 1 ஏக்கர் நிலத்தை நிவாரணத்துக்கு வழங்கினார். மாணவி வழங்கிய ஒரு ஏக்கர் நிலம், தற்போதைய மதிப்பில் ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என்று ரியல் எஸ்டேட் அதிபர்கள் கூறியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...