ஆந்திராவில் தமிழர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

செப்டம்பர் 01, 2018 460

சேஷாலம் (01 செப் 2018): ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்துக்குட்பட்ட ராஜம்பேட் பகுதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் வனத்துறையினருடன் இணைந்து போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் செம்மரம் வெட்டிய குற்றச்சாட்டில் இவர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

செம்மரம் கடத்தியதாக பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் ( வயது 55) எனத் தெரிய வந்துள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டு தப்பியோடிவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...