சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் தூக்கு - அதிவேக தீர்ப்பு!

செப்டம்பர் 02, 2018 482

ஜெய்ப்பூர் (02 செப் 2018): ராஜஸ்தானில் சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜூகுன்ஜூ பகுதியில் 3 வயது சிறுமி கடந்த 2-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வினோத்குமார் (வயது 29) என்பவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஜூகுன்ஜூ மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 13-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 30-ந் தேதி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக வினோத்குமார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வினோத்குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின்போது நீதிபதி கண்ணீர் விட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...