காவல்துறை காவலில் 18 வயது முஸ்லீம் சிறுவன் மர்ம மரணம்!

Share this News:

புதுடெல்லி (19 பிப் 2022): டெல்லியில் காவல்துறை காவலில் இருந்த 18 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

பழுதுபார்ப்பவராக இருந்த 18 வயது சிறுவன் ஜீஷன் மாலிக் ப்ரீத், விஹாரின் குடிசைப் பகுதியில் வசித்து வந்தார். இவர் நவம்பர் 20, 2021 அன்று சிகரெட் பாக்கெட்டைத் திருடியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நிலையில் பிப்ரவரி 14 அன்று காவல்துறை காவலில் மாலிக் உயிரிழந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 அன்று சிறுவன் ஜீஷன் மாலிக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக ஹரி நகர் காவல் நிலையத்தின் உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ஏஎஸ்ஐ) நெரஞ்சன், மாலிக் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் அழைத்து தகவல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மாலிக் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்போது (ஏஎஸ்ஐ) குமார், மாலிக் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சிறுவனுக்கு நெஞ்சு வலி இருப்பதாகவும், மூளையில் நரம்பு வெடித்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மாலிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டார், இருப்பினும், எப்ஐஆர் நகலோ அல்லது திகார் சிறைக்கு மாற்றப்பட்ட ஆவணங்களோ தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மாலிக் உடல்நலக்குறைவால் இறந்தார் என்று காவல்துறை கூறினாலும்,  காவல்துறை காவலில் இருந்தபோது இருந்தபோது, காவல்துறை சித்ரவதையில் உயிரிழந்ததாக மாலிக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளை அவர்கள் ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

மாலிக்கின் அண்டை வீட்டாரான முகமது அப்சல் கூறியதாக மாலிக்கின் உடலில் காயம் இருப்பதைக் கண்டதாக மக்தூப் மீடியா மேற்கோள் காட்டியுள்ளது.


Share this News:

Leave a Reply