கர்நாடகாவில் பாஜகவுக்கு மேலும் சரிவு!

செப்டம்பர் 03, 2018 537

பெங்களூரு (03 செப் 2018): கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

கர்நாடகாவில் நடைபெற்ற கர்நாடகா உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், காங்கிரஸ் 982 இடங்களைப் பெற்றதன் மூலம் பி.ஜே.பியை பின்னுக்கு தள்ளி உள்ளது.

மொத்தமுள்ள 2664 இடங்களில், காங்கிரஸ் 982 இடங்களை வென்றது, பாரதிய ஜனதா கட்சி 929 மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பின்மை) 307 இடங்களை வென்றது.

கர்நாடக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சியின் வளர்ச்சி கொள்கையை ஏற்றுக்கொண்டதாகவும், பா.ஜ.க.வின் 'ஜுமலாஸ்' (சொல்லாட்சிக் கலை) நிராகரித்து உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...