ராஜஸ்தான் அருகே விமானம் விழுந்து நொறுங்கியது!

செப்டம்பர் 04, 2018 585

தேஜ்பூர் (04 செப் 2018): ராஜஸ்தான் அருகே இந்திய போர் விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்திய விமானப்படையின் MiG 27 வகைப் போர் விமானங்கள் பழுதடைந்து வரும் நிலையில் இன்று இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே MiG 27 வகைப் போர் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கித் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் இருந்து விமானி முன்கூட்டியே பாராசூட் உதவியால் உயிர்தப்பிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக விமான படை தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கு உள்ளான விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...