ரூபாய் நோட்டின் மதிப்பு சரிவால் இவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி!

செப்டம்பர் 04, 2018 648

மும்பை (04 செப் 2018): இந்திய ரூபாய் நோட்டின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 16 பைசா குறைந்து ரூ.71.37 ஆக உள்ளது. சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டாலர் வலுவான நிலையினை நோக்கி உயர்ந்துகொண்டு வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதியாளர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி, செலாவணி மாற்றுச் சந்தையில் ரூபாய் மதிப்பு சரிந்து 71.21 டாலராக வர்த்தகம் துவங்கிய நிலையில் அது மேலும் சரிந்து 71.37 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலரானது ஒரே இரவில் ஆசிய நாணயங்களை விடக் கூடுதலாக 4 வாரம் இல்லா உயர்வினை பெற்றுள்ளது. அமெரிக்கா - மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களில் சுமுக முடிவு காணப்பட்டாலும் சீனா இடையிலான வர்த்தகத்தில் இழுபறி நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...