காஷ்மீரில் சிறுமி வன்புணர்ந்து கொலை - மீண்டும் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

September 05, 2018

ஸ்ரீநகர் (05 செப் 2018): காஷ்மீரில் 9 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் 9 -வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த 9-வயது சிறுமியின் தந்தையின் முதல் மனைவியின் 14-வயது மகன் மற்றும் அவனது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அடித்துக்கொல்லப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதங்களால் கண்களை தோண்டி எடுத்தும், பின்னர் திராவகத்தை ஊற்றி உடலை சிதைக்கவும் செய்துள்ளனர். பின்னர், அங்கு இருந்த புதர் ஒன்றுக்குள் மரக்கிளைகள் உள்ளிட்டவற்றை வைத்து உடலை மறைத்து போட்டுச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் சிறுமிகள் வன்புணர்வு தொடர்ந்து அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!