பாஜக குறித்து கூகுள் கூறும் பகீர் தகவல்!

செப்டம்பர் 05, 2018 860

புதுடெல்லி (05 செப் 2018): பாசிச அமைப்புகளுடன் பாஜக தொடர்புடைய அமைப்பு என்று கூகுள் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் 'பாசிச பாஜக ஒழிக' என்று கூறியதற்காக சோபியா என்ற மாணவி கைது செய்யப் பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக, குறித்து கூகுளில் தேடினால் அது ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட பாசிச அமைப்புகளின் கட்டளையில் செயல்படுவதாக கூகுள் பதிலளிக்கிறது. எனவே கூகுள் தலைமையை கைது செய்யவோ அல்லது கூகுளை தடை செய்யவோ பாஜக பரிந்துரைக்குமா? என்று சமூக வலைத் தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...