பாஜக அரசை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய பிரம்மாண்ட பேரணி!

செப்டம்பர் 05, 2018 445

புதுடெல்லி (05 செப் 2018): பாஜக அரசை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் புதனன்று பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளனர்.

விவசாயிகளுக்கு போதுமான கொள்முதல் விலை கிடைக்காத நிலை உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கோரியும், தேசிய வேளாண்மை ஆணையத்தின் பரிந்துரை விலையை ஆளும் மத்திய அரசு உடனே அறிவிக்க வலியுறுத்தியும், விவசாய சந்தையில் பன்னாட்டு முதலீடுகளை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று பிரமாண்ட பேரணி நடத்த போவதாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து, ராம்லீலா மைதானத்தில் இருந்து தொடங்கிய பிரமாண்ட பேரணியில் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பாராளுமன்ற தெருவில், நீண்ட வரிசையில் சிவப்பு கொடிகளாக காட்சி அளித்தன.

விவசாயிகள் பேரணியை ஒட்டி டெல்லியில் உள்ள அஷோகா சாலை, பாபா கரக் சிங் மார்க் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...